உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை புவனேஸ்வரி விஜய யாத்திரை; கோவை பகுதிகளில் வலம் வரும் விக்ரகங்கள்

புதுக்கோட்டை புவனேஸ்வரி விஜய யாத்திரை; கோவை பகுதிகளில் வலம் வரும் விக்ரகங்கள்

கோவை ; ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம்-புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி விஜய யாத்திரை கோவையில் கடந்த 24ம்தேதி முதல் வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வரை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் மற்றும் ஓம் சாந்தானந்த சுவாமிகளின் விக்ரகங்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்காக கோவை சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வருகின்றன.இதில் விருப்பமுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து பிரத்தியேகமாக பூஜை செய்யலாம் என்றுஅதிஷ்டானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி கோவைப்புதூர் பகுதியில் உள்ள பக்தர் ஒருவரின் வீட்டில் வைத்து சுவாமி விக்கிரகங்கள் பூஜை செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !