/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு; சூலம் ரூபத்தில் அம்மனுக்கு தீர்த்தவாரி
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு; சூலம் ரூபத்தில் அம்மனுக்கு தீர்த்தவாரி
ADDED :1173 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவகங்கை தீர்த்த குளத்தில், நடந்த தீர்த்தவாரியில் சூலம் ரூபத்தில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று சிவகங்கை தீர்த்த குளத்தில், நடந்த தீர்த்தவாரியில் சூலம் ரூபத்தில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு விழாவை யொட்டி, சிவகங்கை தீர்த்த குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.