புனே தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
ADDED :869 days ago
மகாராஷ்டிரா: புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி மந்திரில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்.
இன்று காலை 11 மணியளவில் புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோவில் வந்த பிரதமர் மோடி, அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்த புனே நகரின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் தேசத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் லோகமான்ய திலக் தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.