உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு உகந்த சிராவண மாதம்; வட மாநிலங்களில் பக்தர்கள் சிவ பூஜை

சிவனுக்கு உகந்த சிராவண மாதம்; வட மாநிலங்களில் பக்தர்கள் சிவ பூஜை

பிரயாக்ராஜ்; சிராவண மாதம் இந்துக்களின் புனிதமான, வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். இது சிவ பெருமானை வழிபட்டு, அவரின் அருளை பெறுவதற்கு ஏற்ற மாதமாகும். இந்த ஆண்டு ஜூலை 04 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 31 ம் தேதி வரை சிராவண மாதம் நீடிக்கிறது. இந்த ஆண்டு இரண்டு மாதங்கள் சிராவண மாதம் நீடிப்பதால் சிவனடியார்கள் சிவாலயங்களில் குவிந்து வருகின்றனர். உ.பி., பிரயாக்ராஜ், கோவிலில் நேற்று சோம வாரத்தை முன்னிட்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். ஜார்க்கண்ட் வைத்தியநாதர் கோவிலில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !