/
கோயில்கள் செய்திகள் / ஆடி புதன்கிழமை; இன்று பெருமாள், விநாயகரை வணங்கி தொடங்கும் செயல் வெற்றியாகும்
ஆடி புதன்கிழமை; இன்று பெருமாள், விநாயகரை வணங்கி தொடங்கும் செயல் வெற்றியாகும்
ADDED :803 days ago
தோஷமில்லாத கிழமை புதன். புதனின் சுபபலன் ஒருவருக்கு கிடைக்காவிட்டால் அவரது உழைப்பு வீணாகப் போய் விடும். நவக்கிரகங்களில் விவேகமும், பண்பும் நிறைந்தவர் புதன். கோயில்களில் நவகிரக சன்னதியில் புதன் கிழக்கு நோக்கியே காட்சி தருவார். அறிவுத்திறன், கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். புதனின் சுபபலன் கிடைத்தால் தொழில் மற்றும் வேலை இரண்டிலும் வெற்றிக் கொடியை நாட்டலாம். இன்று விநாயகரை வணங்கி தொடங்கும் செயல் வெற்றியாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நினைத்தது நடக்கும். இன்றைய நன்னாளில், புதன் பகவானையும், பெருமாளையும் வழிபட ஆரோக்கியமும் அமைதியும் கிடைக்கும்.