உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பவுர்ணமி; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஆடி பவுர்ணமி; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ துாரம் சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு வருகின்றனர்.  ஆடி மாத பவுர்ணமியான இன்று அதிகாலை, 3:25 மணி முதல், நாளை அதிகாலை, 1:05 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !