உத்தரவையில் முளைப்பாரி விழா
ADDED :1117 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை ஊராட்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. இரவில் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஏந்தியவாறு பெண்கள் ஊர்வலமாக சென்றனர். நேற்று மாலை 4:30 மணி அளவில் ஊரணியில் கும்மி கொட்டிய பின்பு பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை உத்தரவை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.