தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :830 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே அழகாபுரி மகாலட்சுமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அழகாபுரி மகாலட்சுமி கோயிலில் பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படும். நேற்று இரவு கரகாட்டம் நையாண்டி மேளத்துடன் கரகம் அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. முளைப்பாரியுடன் மகாலட்சுமி மின்னலங்கார சப்பரத்தில் ஊர்வலமாக வந்தார்.