/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தரிசனம்
காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தரிசனம்
ADDED :1131 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தவதற்காக கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி உருவப்படத்தையும், சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கி கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.