உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா

முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 1008 சங்காபிஷேக விழா நடந்தது.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு, பச்சை மஞ்சள் அபிஷேகம், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்து. நேற்று மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேக நடந்தது. வரும் ஆக.11 கோமாதா பூஜையும் மாலை திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !