பரமக்குடி சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை
ADDED :794 days ago
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை நடந்தது. இக்கோயிலில் இன்று காலை 7:00 மணி அணுக்கை, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வருண பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடந்தது. பின்னர் வேல் அர்ச்சனை நிறைவடைந்து, சத்ரு சம்ஹார மூல மந்திர திரிசதி அர்ச்சனை ஹோமமும், ஷண்ணவதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஹாபூர்ணாகுதி நிறைவடைந்து, கடம் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு மகா திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை சத்ரு சம்ஹார ஹோம விழா குழுவினர் மற்றும் பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.