உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை ; தெப்பம் உற்சவம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை ; தெப்பம் உற்சவம்

திருவள்ளூர்; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை ஒட்டி தெப்பம் உற்சவம் நடந்தது. இதில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதேநேரத்தில், காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், சண்முகப்பெருமானுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு வந்தனர். பொது வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். தொடர்ந்து இரவு முதல் நாள் தெப்பம் நடைபெற்றது. முதல் நாள் உற்சவத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !