திருமலையில் அருங்காட்சியக பணிகளை துவக்கி வைத்தார் பூமனா கருணாகர் ரெட்டி
ADDED :890 days ago
திருப்பதி : திருமலையில் உள்ள அருங்காட்சியகத்தில் புதிய பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி நேற்று பொறுப்பேற்றார். திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் உலகத் தரம் வாய்ந்த தொன்மை மையமாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருங்காட்சியக மேம்பாட்டுப் பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.