உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் அம்மன் கோவிலில் கஞ்சி கலயம் ஊர்வலம்: பக்தர்கள் பங்கேற்பு

கூடலூர் அம்மன் கோவிலில் கஞ்சி கலயம் ஊர்வலம்: பக்தர்கள் பங்கேற்பு

கூடலூர்: கூடலூர், இரண்டாவது மைல் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது.

காலை 11:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, துவங்கிய கஞ்சி கலயம் ஊர்வலத்துக்கு கோவில் கமிட்டி தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். ஊர்வலத்தை கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், எடுத்து பங்கேற்றனர். ஊர்வலம் இரண்டாவது மைல் ஜங்ஷன் வரை சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு கூல் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !