உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ராஜஸ்தான் அமைச்சர் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜை செய்து வழிபாடு

காளஹஸ்தி சிவன் கோயிலில் ராஜஸ்தான் அமைச்சர் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜை செய்து வழிபாடு

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ராஜஸ்தான் மாநில சிறு தொழில் துறை அமைச்சர் ராஜிவ் அரோரா மற்றும் (டெக் மகேந்திரா பிரைவேட் லிமிடெட்) சி எம் டி தலைமை நிர்வாக இயக்குனர் சிபி குரு குர்நாணி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை கோயில் அதிகாரிகள் மற்றும் ஆகார்ஷ் ரெட்டி சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் சிறப்பு ஆசிர்வாதம்செய்ததோடு, கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !