ஏரல் அருணாசல சுவாமி கோயிலில் பச்சைசாத்தி தரிசனம்; பக்தர்கள் பரவசம்
ADDED :1137 days ago
தூத்துக்குடி ; ஏரல் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை விழாவில் சுவாமி பச்சைசாத்தி தரிசனம் தரும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஏரல் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை சுவாமி வீதியுலா மற்றும் இரவு பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். விழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் சுவாமி பச்சைசாத்தி தரிசனம் தரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.