ஆவணி முதல் சனி; சிவ பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1141 days ago
கோவை; ராம் நகர் வி. என். தோட்டத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள சனி பகவானுக்கும், சிவ பக்த ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.