உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் விளக்கு பூஜை

சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் விளக்கு பூஜை

சென்னை: தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்து வந்தனர். பெரும்பாலான கோவில்களில் இன்று ஆவணி மாதம் பிறந்தாலும், அதை ஆடி மாதத்தின் ஐந்தாவது வெள்ளிக்கிழமையாக, பக்தர்கள் கடைபிடித்து கோவில்களில் அம்மனுக்கு அலங்கார பூஜை செய்து வழிபட்டனர். தி.நகர் பத்மாவதி தாயார் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !