ஹைதராபாதில் கங்கா தெப்போற்சவம் ; பக்தர்கள் வழிபாடு
ADDED :837 days ago
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசிக்கும் கங்கபுத்ரா சமூகத்தினர் ஆண்டுதோறும் கங்கா தெப்போற்சவம் என்னும் தெப்பத் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதையொட்டி ஹைதராபாதில் உள்ள ஹுசைன்சாகர் ஏரியில் அலங்கரிக்கப்பட்ட பானைகளில் எடுத்துவரப்பட்ட பாரம்பரிய உணவுடன் திருநங்கை பக்தர் ஒருவர் நேற்று பூஜை செய்தார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.