உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தவனப்பட்டி செல்வ விநாயகர், காளியம்மன், மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நந்தவனப்பட்டி செல்வ விநாயகர், காளியம்மன், மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை நந்தவனப்பட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர், காளியம்மன், மகாமாரியம்மன், பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், டாக்டர் ஜே.சி. சேகர், பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, தி.மு.க., நகர செயலாளர் கணேசன் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !