அய்யலூர் கோயிலில் பணி செய்ய பாதுகாப்பு கேட்டு பூஜாரிகள் மனு
ADDED :787 days ago
வடமதுரை: அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில் பூஜாரியாக கெங்கையூர் வைரப்பெருமாள் என்பவரை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் பெற்று பரம்பரை தர்மகர்த்தா ரங்கநாதன் நியமித்துள்ளார். மேலும் இங்குள்ள முனியப்ப சுவாமி கோயில் பரம்பரை பூஜாரியாக கருஞ்சின்னானுார் சின்னுவும் உள்ளனர். இவர்கள் இருவரும் மாவட்ட எஸ்.பி.,யிடம் தந்த மனுவில், கோயிலில் பணி செய்யவிடாமல் சிலர் தடுத்து மிரட்டியதால் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு தரக்கேட்டு உத்தரவும் பெற்றுள்ளேன். எனவே பூஜாரி பணி செய்வதற்கு யாரும் இடையூறு தராத வகையில் பாதுகாப்பு தர வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.