உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட ஜெயந்தி, சஷ்டி விரதம்: கருடன், முருகனை வழிபட எல்லாம் கிடைக்கும்.. நல்லதே நடக்கும்

கருட ஜெயந்தி, சஷ்டி விரதம்: கருடன், முருகனை வழிபட எல்லாம் கிடைக்கும்.. நல்லதே நடக்கும்

திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரத அனுசாசன பர்வம் கூறுகிறது. ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றி பாடி உள்ளனர். திருமாலின் வாகனமான கருடன் என்கின்ற பட்சிராஜன் சுவாதியில் அவதரித்தவர். நித்ய சூரிகளுள் அனந்த கருட,  விஷ்வக்சேனர் ஆகிய மூவரில் கருடனும் இடம் வகிக்கிறார். கருட பகவானை அனைத்து திருமால் திருத்தலங்களிலும் தரிசிக்கலாம்.  எனினும் நாச்சியார்கோவில் கல் கருடன், திருவரங்கம், திருவெள்ளியங்குடி ஆகிய தலங்களில் சங்கு, சக்கரம் தாங்கிய சதுர்புஜ கருடன்  போன்றவர்கள் அதிமுக்கியமான கருடன்களில் சிலர். அதேபோல் ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதன் திருக்கோயில் மதில்மீது  காட்சியளிக்கும் கருட பகவானும் மிக விசேஷமானவர். இவரை அருள்பட்சி ராஜர் என்று அழைக்கின்றனர். இன்று கருட தரிசனம் செய்தால் நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். முருகனுக்கு உரிய விரதங்களுள் முக்கியமானது கந்தசஷ்டி விரதம். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !