சந்திரயான் 3 வெற்றிக்கு திருப்பரங்குன்றத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :835 days ago
திருப்பரங்குன்றம்: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் சிறப்பாக, வெற்றிகரமாக நிலவில் தரை இறங்க வேண்டி திருநகர் மங்கள விநாயகர் பக்த ஜன சபையின் சார்பில் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையிலுள்ள வெற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சரவண பொய்கையிலிருந்து 108 குடங்கள் தண்ணீர், நூறு லிட்டர் பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், கோடி தீர்த்தம் அபிஷேகங்களும், கூட்டுப் பிரார்த்தனையும் முடிந்து, சந்திரயான் 3 விக்ரம் லேண்டருக்கு எலுமிச்சம் பழங்களால் திருஷ்டி சுத்தி போடப்பட்டது. நிர்வாகிகள் மணிக்கலை அரசன், ஸ்ரீ பாரத், ஸ்ரீசாஸ்தா, முத்து, சீனிவாசன், அங்குசாமி, ராஜசேகர், பழனிச்சாமி கலந்து கொண்டனர்.