உலக நன்மைக்காக வெங்கடேச பெருமாள் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :783 days ago
திருநகர்; மதுரை விளாச்சேரி பூமி, நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் நவநீத பெருமாள் 104வது உற்சவ விழா, உலக நன்மை, பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டி விளக்கு பூஜை நடந்தது. மூலவர்கள், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. கோயில் முன்பு உற்சவர்கள் எழுந்தருளினர். உற்சவர்கள் முன்பு பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம் பூஜை ஏற்பாடுகள் செய்தனர். திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் ஆக. 1ல் புறப்பாடான நவநீத பெருமாள் மதுரை, வண்டியூர், திருப்புவனம், மானாமதுரை வழியாக கட்டிக்குளம் சென்று மீண்டும் திருப்பரங்குன்றம் திரும்பினார். வழியில் விளாச்சேரி பூமி, நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது.