அம்பை ராகவேந்திரர் கோயிலில் குரு பூஜை ஆக. 31ல் துவக்கம்
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் தென்பொதிகை ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் ஆராதனை மற்றும் குரு பூஜை 31ம் தேதி காலை துவங்குகிறது. அம்பாசமுத்திரம், தென்பொதிகை ராகவேந்திரர் கோயிலில் 3ம் ஆண்டு ராகவேந்திரர் சுவாமி ஆராதனை விழா மற்றும் 352 வது குரு பூஜை 31ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. 31ம் தேதி காலை 9:30 மணிக்கு சத்ய நாராயணர் ஹோமம், மாலை 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. செப்.1ம் தேதி காலை 9:30 மணிக்கு லட்சுமி நரசிம்மர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி காலை 9:30 மணிக்கு ராகவேந்திரர் ஆராதனை, குரு பூஜை, வித்யா சரஸ்வதி ஹோமம், ராமபிரான் மூலமந்திர ஹோமம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு தென்காசி ஹரிகிருஷ்ணன் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தன ராகவேந்திரர் பஜனை நடக்கிறது. குருபூஜை விழாவுக்காக பொருள் மற்றும் நன்கொடை வழங்க 96001 88025, 99447 73624 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை தென்பொதிகை ராகவேந்திரா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.