பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்சவம்; சிறப்பு பூஜை
ADDED :783 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்சவ விழா துவங்கி நடந்து வருகிறது. இதன்படி கோயில்களில் வருடம் முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடப்பது வழக்கம். அப்போது விழா காலங்களில் ஏற்படும் ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்யும் நோக்கில் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் விழாவில், காலை, மாலை சிறப்பு ஹோமங்கள் நடந்து வருகிறது. ஆக., 30 அன்று காலை அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. அன்று மாலை பெருமாள் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.