ஆவணி சோமவாரம்; புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1142 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோயிலில் ஆவணி மாதம் இரண்டாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள புவனேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.