/
கோயில்கள் செய்திகள் / ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம்; ஐஸ்வர்யமாக காட்சியளித்த சுவாமி கண்டு பக்தர்கள் பரவசம்
ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம்; ஐஸ்வர்யமாக காட்சியளித்த சுவாமி கண்டு பக்தர்கள் பரவசம்
ADDED :773 days ago
பெரியகுளம்; பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பெரியகுளம் பாலசாஸ்தா ஐயப்பன் கோயிலில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், மஞ்சள்பொடி,பால், தயிர், பன்னீர், இளநீர் உட்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலர் அலங்காரத்தில் ஐயப்பன் தீபம் ஒளியில் ஐஸ்வர்யமாக காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் பிரசன்னா செய்திருந்தார்.