/
கோயில்கள் செய்திகள் / ஆவணி பவுர்ணமி; அருணாசலேஸ்வரர் தரிசிக்க குவிந்த பக்தர்கள்.. கிரிவலம் சென்று வழிபாடு
ஆவணி பவுர்ணமி; அருணாசலேஸ்வரர் தரிசிக்க குவிந்த பக்தர்கள்.. கிரிவலம் சென்று வழிபாடு
ADDED :935 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவர். அதன்படி இன்று ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு, கோவில் ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்ட சிறப்பு பந்தலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சிவாச்சாரியார்கள் பூணூல் மாற்றும் வைபம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி செய்து வருகின்றனர்.