பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
ADDED :827 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த கல்யாண நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.