உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வசதிக்காக சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பஸ் இயக்கம்!

பக்தர்கள் வசதிக்காக சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பஸ் இயக்கம்!

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் இருந்து, சமயபுரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆன்மீகச் சுற்றுலா வரும் அனைவரும் ஸ்ரீரங்கம் வந்துவிட்டு, சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசிக்கின்றனர். இதனால், சமூக ஆர்வலர்கள், ஸ்ரீரங்கம் நகர் நலச்சங்கம், தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரத்திற்கு பஸ் இயக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம், காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை நகல் எடுத்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, ஸ்ரீரங்கம் மக்கள் அனுப்பினர். இதையடுத்து, ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரத்திற்கு பஸ் இயக்கம் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு, இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !