அத்தண்டமருதூர் மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :823 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அத்தண்டமருதூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அத்தண்டமருதூர், அணைக்கட்டு அருகே அமைந்துள்ள பழமையான மதுரை வீரன் கோவில் புதுப்பிக்கப்பட்டும், அருகில் மீனாட்சி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தது. பின் 10:30 மணிக்கு மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.