வெற்றிலை அலங்காரத்தில் வராகி அம்மன்; பக்தர்கள் பரவசம்
ADDED :822 days ago
சிவகாசி : சிவகாசி துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு நேற்று காலை மூலவர் வராகி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் வெற்றிலை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.