திருப்பதியில் வரும் 12ல் ஆழ்வார் திருமஞ்சனம்: விஐபி தரிசனம் ரத்து
ADDED :818 days ago
திருப்பதி; திருமலை ஏழுமலையான் கோயில் வரும் 12ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆழ்வார் திருமஞ்சனம் செப்.,12ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.