சிறுவாபுரியில் பாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :816 days ago
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு நடை பெறும் விழாக்களில், ஆவணி மாதம் நடை பெறும், 108 சங்காபிஷேக விழா சிறப்பு வாய்ந்தது. நேற்று காலை விழா நடந்தது. இங்குள்ள விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் உற்சவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.