மாரியம்மன் கோவில் வருடாபிஷேக விழா
ADDED :813 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அரசனூர் முத்துமாரியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வரர் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக வேள்விகள் நடைபெற்றது. பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர் அம்மனுக்கு ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.