பழநியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்
ADDED :812 days ago
பழநி: பழநியில் ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற திட்டமிட்டு உள்ளனர். இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பழநியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது. பழநி பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்பின் வர்ணம் பூசும் பணிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. பழநிப்பகுதியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு அதனை விஜர்சன ஊர்வலமாக எடுத்துச் சென்று சண்முக நதியில் கரைக்க உள்ளனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்கும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பழநிய நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.