திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு மீண்டும் அபிஷேக பால் பிரசாதம்
ADDED :871 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு மீண்டும் பால் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பால் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் செய்யப்படும். அந்த அபிஷேக பாலுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனாவிற்கு பின்பும் வழங்கப்பட்டது. நாட்டுச் சர்க்கரை பால் பிரசாதம் சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இன்று முதல் பக்தர்களுக்கு நாட்டுச்சர்க்கரை சேர்க்காமல் அபிஷேக பால் மட்டும் வழங்கப்பட்டது.