உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா

வரசித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வரசித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.

நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை வேதிகார்ச்சனை, உயிர் ஊட்டுதல், கண் திறத்தல், பெயர் சூட்டுதல், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மூலவர் வரசித்தி விநாயகருக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை வள்ளிநாயகி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு கன்னிகா தானம், திருமாங்கல்ய தாரணம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !