மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
746 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
746 days ago
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் பல்லாக்கில் விநாயகர் வீதி உலா நடந்தது. ஹிந்து அமைப்பினர் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அலங்கரித்த பல்லாக்கில் விநாயகர் எழுந்தருளியதும், கோயில் ரதவீதியில் வீதி உலா வந்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் திட்டக்குடி, வேரக்கோடு, இந்திரா நகர் உள்ளிட்ட 24 இடங்களில் வைத்து இருந்த விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர். மேலும் திட்டக்குடியில் உள்ள 10 அடி உயர விநாயகர் சிலைக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம்மூர்த்தி, நிர்வாகி தட்சிணாமூர்த்தி, வி.எச்.பி., நிர்வாகி சரவணன், ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் திட்டக்குடி, நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிட்ட 12 இடத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
746 days ago
746 days ago