உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூந்தலை கொண்ட அய்யனார் கோயிலில் பொங்கல் விழா

பூந்தலை கொண்ட அய்யனார் கோயிலில் பொங்கல் விழா

பாலமேடு: பாலமேடு அருகே சல்லிக் கோடாங்கிபட்டியில் பூந்தலை கொண்ட அய்யனார் கோயிலில் பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் உலக மக்கள் நன்மை, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி விளக்கு பூஜையும், 2ம் நாள் காலை சுவாமிக்கு பொங்கல் வைத்து 101 படையலிட்டு வழிபாடு செய்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்றிரவு அர்ஜுனன் தவசு நாடகம் நடந்தது. 3ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !