உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழாவில் நெகிழ்ச்சி; சீர்வரிசை தட்டுடன் முஸ்லிம்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் நெகிழ்ச்சி; சீர்வரிசை தட்டுடன் முஸ்லிம்கள்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கிழக்கு பகுதி இளைஞர் பேரவை மற்றும் சிறகுகள் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் முஸ்லிம்கள் சீர் வரிசை வழங்கியது மதநல்லிணக்கத்தை காட்டியது. பரமக்குடியில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடந்தன. நேற்று காலை கிழக்குப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியை நோக்கி சீர்வரிசை தட்டுகள் எடுத்து ஊர்வலம் வந்தனர். அவர்கள் எடுத்து வந்த தேங்காய், பழம் மற்றும் இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின் இளைஞர் பேரவை சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடந்த இச்சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !