உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது.

திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி பூர்வாங்க பணி தொடங்க இன்று காலை  அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டு சிவாச்சாரியார் சிறப்பு தீபாரணை செய்து வழிப்பட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !