பாலக்காட்டில் சர்வதேச பிராமணர்கள் மாநாடு; இன்று முதல் 3நாள் நடக்கிறது
ADDED :808 days ago
பாலக்காடு : பாலக்காட்டில் சர்வதேச பிராமணர்கள் மாநாடு இன்று 22ம் தேதி துவங்கியது. மூன்று நாள் நடக்கும் நடக்கிறது.
பிராமணர்கள் சங்கம் பாலக்காட்டில் 22,23,24 ஆகிய தேதிகளில் தனது உலகளாவிய மாநாட்டை நடத்துகிறது. கேரளா பிராமண சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 1,500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கும், சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான புதிய எல்லைகளைத் திறப்பதற்கும் இந்த சந்திப்பு சிறந்த தளத்தை வழங்குகிறது. பாலக்காடு கிளப் 6 கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இந்த மாநாடில் வைதிக கலாச்சாரம், கல்வி, மேலாண்மை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில்முனைவு குறித்த சிறப்பு வர்த்தக கண்காட்சியும் இடம் பெறுகிறது.
https://www.youtube.com/watch?v=6773xHkTFmQ