செஞ்சி சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம்
செஞ்சி: செஞ்சி சக்தி விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை விஜர்சனம் செய்ய ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
செஞ்சி சிறுகடம்பூர் சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 33-ம் ஆண்டாக 21 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்தினர். இந்த சிலையை புதுச்சேரி கடலில் கரைப்பதற்காக நேற்று மாலை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதற்கு முன்னதாக சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, அதிமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சலை நெடுஞ்செழியன், லட்சுமி வெங்கடேசன், மாஜி கவுன்சிலர் சீனுவாசன், விழா குழுவினர் முருகன், வெங்கடேசன், பார்த்திபன், வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாத விநியோகம் நடந்தது. விநாயகர் சிலையை செஞ்சி காந்தி பஜார், திண்டிவனம் சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர்.