உலக நன்மை வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் லலிதா சஹஸ்ரநாமம் பாடி வழிபாடு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தில்லையம்மன் கோவிலில் சென்னையைச் சேர்ந்த மஹாமேரு மண்டலி குழுவினர் சார்பில் லலிதா சஹஸ்ர நாமம் வாசிக்கப்பட்டது.
சென்னை மகாமேரு மண்டலி சார்பில் உலக நன்மை வேண்டி 108 கோவில்களில், ஒவ்வொரு வெள்ளிகிழமையிலும் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று லலிதா சஹஸ்ரநாமம் கூறி வழிபடுவது என முடிவு செய்து கடந்த ஆண்டு சென்னை மங்களாபுரி காமாட்சி அம்மன் கோவிலில் முதன்முதலாக துவங்கப்பட்டது. இந்திரா பாலாஜி தலைமையிலான இக்குழுவினர் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவில்களில் இதனை நடத்தி வருகின்றனர். 58 வது வாரமாக, கடந்த வாரம் காஞ்சிபுரம் கண்ணன்தாங்கள் பகுதியில் உள்ள 108 சக்தி பீடம் கோவிலில் பாடினார். இந்நிலையில் இன்று 59 வது வாரமாக, காலை சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலிலும், மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் உலக நன்மை வேண்டி லலிதா சஹஸ்ரநாமம் பாடி வழிபட்டனர்.இக்குழுவின் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் பங்கேற்று பாடி வருவது குறிப்பிடத்தக்கது.