நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :807 days ago
சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்ஸவ விழா, இந்தாண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.