பச்சை மாமலை போல் மேனியாக சயன நிலையில் அரங்கநாதர் அருள்பாலிப்பு
ADDED :859 days ago
கோவை; கஞ்சி கோணம்பாளையத்தில் உள்ள அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி தாயார்களுடன் பச்சை மாமலை போல் மேனியாக சயன நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பரவச தரிசனம் செய்தனர்.