உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறிய, பெரிய திருவடிகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; விண்ணை முட்டிய கோவிந்தா கோஷம்!

சிறிய, பெரிய திருவடிகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; விண்ணை முட்டிய கோவிந்தா கோஷம்!

திருப்பதி; திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று மாலையில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய வாகன சேவையான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று காலை 6ம் நாள் விழாவில், மலையப்ப சுவாமி அனுமன் வாகனத்தில் வலம் வந்தார். இன்று புரட்டாசி சனியில் சிறிய திருவடியான அனுமன் வாகனத்தில் சுவாமியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருமாலின் வாகனமான கருடன் பெரிய திருவடி என்றும் அனுமன் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றனர். நேற்று பெரிய திருவடியான கருட வாகனத்திலும். இன்று சிறிய திருவடியான அனுமன் வாகனத்திலும் பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்டியது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !