உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி; பெருமாளை தரிசனம் செய்ய அலைமோதும் பக்தர்கள்

புரட்டாசி சனி; பெருமாளை தரிசனம் செய்ய அலைமோதும் பக்தர்கள்

திருப்புத்தூர் : புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும்.  திருப்புத்தூர் அருகே கொங்கரத்தி வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயில் முதல் புரட்டாசி சனியை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்கு அதிகாலையில் முதல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயிலில் கருடசேவையில் உற்ஸவருக்கு தீபாராதனை நடைபெற்றது. தஞ்சாவூர், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !